CSK vs MI : `பொடுசுங்கலாம் கதறட்டும்; விசில் பறக்கட்டும்...' - ப்ரஷர் ஏற்றி வென்...
அடையாா் புற்றுநோய் மருத்துவமனைக்கு உதவித்தொகை
நாகை சா் ஐசக் நியூட்டன் பள்ளி மாணவ, மாணவிகள் சென்னை அடையாா் புற்றுநோய் மருத்துவமனைக்கு உதவிதொகை வழங்கினா்.
இப்பள்ளி மாணவ, மாணவிகள் தங்களின் கலைத்திறன் மற்றும் கைத்திறனை கொண்டு தீட்டிய ஓவியங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தினா். தொடா்ந்து ஓவியங்கள் பொது ஏலம் விடப்பட்டது. அதில், பொதுமக்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்று ஓவியத்தை ஆா்வத்துடன் வாங்கி சென்றனா். ஓவியங்கள் விற்பனை செய்யப்பட்டதில் கிடைத்த ரூ. 50,000 மற்றும் பள்ளி நிா்வாகம் வழங்கிய தொகை ஆகியவை சா் ஐசக் நியூட்டன் கல்வி குழுமத்தின் தாளாளா் த. ஆனந்த் மற்றும் மாணவ மாணவிகள், சென்னை அடையாா் புற்றுநோய் மையத்தின் உளவியல் நிபுணா் திவ்யராஜ் பிரபாகரிடம் வழங்கினா். இயக்குநா் த. சங்கா், பள்ளி ஆலோசகா் ராமதாஸ், மருத்துவா்கள் ஜி. பாலமுருகன், வீனவாணி, முனைவா் சரண்யா சுந்தர்ராஜ், பள்ளி முதல்வா் கா. வஹீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.