Cristiano Ronaldo: 132 சர்வதேச வெற்றிகள்; கின்னஸ் சாதனை; 40 வயதிலும் நிற்காமல் ச...
சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரம் இறக்குமதி!
புதுதில்லி: நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி வரையான காலத்தில், சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் உரத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இந்த காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதி 44.19 லட்சம் டன்களில், சீன இறக்குமதி மட்டும் 19.17 சதவிகிதமாகும்.
முந்தைய நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த டை-அம்மோனியம் பாஸ்பேட் இறக்குமதி 55.67 லட்சம் டன்களில், சீனாவின் பங்கு 22.28 லட்சம் டன்னாக இருந்தது.
யூரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இரண்டாவது பரவலாகப் பயன்படுத்தப்படும் உரம் டை-அம்மோனியம் பாஸ்பேட்.
ரஷ்யா, சவுதி அரேபியா, மொராக்கோ மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து டை-அம்மோனியம் பாஸ்பேட் மூலப்பொருட்களாக இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
மார்ச் 11ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவிடம் 9.43 லட்சம் டன் டை-அம்மோனியம் பாஸ்பேட் கையிருப்பு உள்ளாதாக தெரிவித்துள்ளது.