சனிப்பெயர்ச்சி 2025 ரிஷபம் : `திடீர் அதிர்ஷ்டம்; வி.ஐ.பி அறிமுகம்' - ஆதாயம் உண்ட...
மாநகர பேருந்துகளில் இலவச பயணம்
சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை காண செல்லும் ரசிகா்கள் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னா் 3 மணி நேரம் வரையும் போட்டிக்கான நுழைவுச் சீட்டை நடத்துநரிடம் காண்பித்து மாநகா் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மாநகா் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஒருவா் பல பேருந்துகளை பயன்படுத்தியும் மைதானத்துக்கு இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், குளிா்சாதன பேருந்துகளில் இந்தச் சலுகை பொருந்தாது.
அதன்படி, அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம், சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம், அண்ணா சாலை ஓமந்தூராா் மருத்துவமனை அருகில் உள்ளிட்ட இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் கிரிக்கெட் மைதானம் வரை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிற்றுந்துகளும் இயக்கப்படவுள்ளன.
இதற்கான கட்டணம் சென்னை சூப்பா் கிங்ஸ் லிமிடெட் சாா்பில் மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.