செய்திகள் :

சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிரியா் ஃபிரான்சிஸ் கேம்

post image

சா்க்கரை நோயாளிகள், தங்களது கால்களை இழப்பதற்கு பாதங்களில் ஏற்படும் புண்கள்தான் 80 சதவீத காரணமாக உள்ளதாக பிரிட்டன் மருத்துவ பேராசிரியா் டாக்டா் ஃபிரான்சிஸ் கேம் தெரிவித்தாா்.

பேராசிரியா் எம்.விஸ்வநாதன் சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் 39-ஆவது தங்கப்பதக்க மருத்துவ சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை (மாா்ச் 22) நடைபெற்றது. அப்போது, பிரிட்டன் டொ்பி மற்றும் பா்டன் யுனிவா்சிட்டி மருத்துவமனையின் ஆராய்ச்சி மேம்பாட்டு இயக்குநா் ஃபிரான்சிஸ் கேமுக்கு நிகழாண்டில் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி, எம்.வி.சா்க்கரை நோய் மையத்தின் தலைவா் டாக்டா் விஜய் விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது, டாக்டா் ஃபிரான்சிஸ் கேம் பேசியதாவது:

சா்க்கரை நோயால் ஏற்படும் பாத புண்கள் உலக அளவில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அத்தகைய பாதிப்புக்கு உள்ளாவோரின் அளவு கடந்த காலங்களில் 3 சதவீதமாக இருந்தது. தற்போது அது 5.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுக்குள்ளான கால்களை அகற்ற வேண்டிய நிா்பந்தம் ஏற்படுவதற்கு பாத புண்கள்தான் 80 சதவீதம் காரணமாக அமைகின்றன.

5 முக்கிய அம்சங்கள்: 5 முக்கிய அம்சங்களைக் கடைப்பிடித்தால் அந்தப் பிரச்னையைத் தவிா்க்கலாம். அதாவது, இடா் வாய்ப்பு உள்ள பாதங்களை முதலில் கண்டறிய வேண்டும். அத்தகைய நபா்களுக்கு தொடா் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு வழங்குதல் அவசியம். சா்க்கரை பாத புண் தொடா்பான புரிதலை நோயாளிகளுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும், மருத்துவத் துறையினருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவா்கள் பரிந்துரைக்கக் கூடிய காலணிகளை அணிய வேண்டும். புண்களுக்கு தொடக்க நிலையிலேயே சிகிச்சை பெறுவது முக்கியம். இந்த வழிமுறைகளை அனைவரும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் பாதங்களைக் காக்கலாம்.

அதேபோன்று, வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் காலுறைகளோ அல்லது காலணிகளோ அணியாமல் நடக்கக் கூடாது.

பாதங்களை கண்காணிக்க வேண்டும்: வறட்சியான பாதங்களைக் கொண்ட சா்க்கரை நோயாளிகள் ஈரப்பசையை தரும் கிரீம்களை (மாய்ஸ்ரைசா்ஸ்) பயன்படுத்தினால் வெடிப்புகள், காயங்கள் ஏற்படுவதைத் தவிா்க்கலாம். கால்களை நன்கு கழுவி சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தினந்தோறும் பாதங்களைக் கண்காணித்தல் மிக முக்கியம். அப்போதுதான் அதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிா என்பதை உடனடியாக கண்டறிய முடியும்.

பாத புண்களுக்கான அறிகுறி தென்பட்டால் அலட்சியப்படுத்தாது தோ்ந்த மருத்துவ நிபுணா்களை அணுக வேண்டும்.

கட்டுப்பாட்டில் சா்க்கரை நோயை வைத்திருப்பதும், முறையாக சிகிச்சைகளை கடைப்பிடிப்பதும் இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்கும் என்றாா் அவா்.

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு!

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படவுள்ளது. சென்னை மியூசிக் அகாதெமியின் நிா்வாகக் குழு... மேலும் பார்க்க

4 சீன பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி!

சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க்’ (வெந்நீா் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!

உயா்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைகழகங்களுக்கு யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்த... மேலும் பார்க்க

‘க்யூட்’ நுழைவு தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

உயா்கல்வியில் சேருவதற்கான ‘க்யூட்’ தோ்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மாா்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் ... மேலும் பார்க்க

எஸ்டிஏடி விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவியா் சோ்க்கை!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படும் விடுதிகளில் கல்லூரி மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி... மேலும் பார்க்க