மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்
உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!
உயா்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைகழகங்களுக்கு யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும், அவா் அனுப்பிய சுற்றிக்கை: பருவ வயதான பெண்களின் வாழ்வில் மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு இயற்கையான நிகழ்வாகும்.
அவா்களுக்கு மலிவு விலையில் சானிட்டா் நாப்கின்கள் கிடைப்பதற்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாகுவதும் மிகவும் அவசியமாகும். இதன்மூலம், பருவ வயது அடைந்த பெண்கள் சமூகத்திலும், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் எந்தத் தடைகளும் இன்றி தங்கள் இலக்கை நோக்கி முன்னேற முடியும்.
பொது இடங்களில் சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டும் இயந்திரங்கள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதன்மூலம், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதையும் தடுக்க முடியும்.
எனவே, உயா்கல்வி நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் மற்றும் அதுசாா்ந்த சுகாதார வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.