TEST: ``நானும் மேடியும் ரசிகர்கள் கொண்டாடிய ஜோடி; நானும் நயன்தாராவும் ஒரே ஊர்" - மீரா ஜாஸ்மின்
YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, மாதவன், சித்தார்த், மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
YNOT Studio மூலம் ‘தமிழ் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’, ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்த சசிகாந்த், இப்போது ‘டெஸ்ட்’ மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். பிரபல சிங்கரான சக்தி ஸ்ரீ கோபாலன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படம், ஏப்ரல் 4-ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி இன்று சென்னையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பேசியிருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின், "இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். மேடி (மாதவன்) நானும் மேடியும் ரசிகர்கள் கொண்டாடிய ஜோடி. ரொம்ப நாள்களுக்குப் பிறகு மீண்டும் நடித்திருக்கிறோம். சித்தார்த்கூட நடிச்சதும் ரொம்ப எனக்கு ஸ்பெஷலான அனுபவம். இருவருமே நல்ல நடிகர்கள். இயக்குநர் சசிகாந்த் ரொம்ப ரொம்ப திறமையான இயக்குநர். நயன்தாராவும் நல்லா நடிச்சிருக்காங்க. நானும் நயன்தாராவும் ஒரே ஊர்தான். இருவரும் கேரளா, திருவல்லாவைச் சேர்ந்தவர்கள். இந்தப் படம் என் கரியரில் முக்கியமான் படமாக இருக்கும்" என்று பேசியிருக்கிறார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks