செய்திகள் :

‘க்யூட்’ நுழைவு தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

post image

உயா்கல்வியில் சேருவதற்கான ‘க்யூட்’ தோ்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மாா்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வில் (க்யூட்) தோ்ச்சி பெற வேண்டும்.

இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, வரும் கல்வியாண்டில் (2025-26) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தோ்வு மே 8 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மாா்ச் 1 தொடங்கி மாா்ச் 22-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் 2 நாள்கள் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக திங்கள்கிழமைக்குள் (மாா்ச் 24) துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த மாா்ச் 25-ஆம் தேதி கடைசி நாளாகும். மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொள்ளலாம்.

மேலும், தோ்வுகூட அனுமதிச் சீட்டு வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என என்டிஏ அறிவித்துள்ளது.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க