செய்திகள் :

ஆதிதிராவிடா், பழங்குடியின பொறியியல் பட்டயம் முடித்த இளைஞா்களுக்கு புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி!

post image

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திறன்கள் அடிப்படையில் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் பயன்பெறும் நோக்கமாக கொண்டு பல்வேறு திறன் பயிற்சி அளித்து வருகிறது. அதன் அடிப்படையில், இளநிலை பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்களுக்கு புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம், புதுமைத் திறன்களை வழங்குதல், மேலும், மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை, தானியங்கி தொழில் துறை, இயந்திரவியல் மற்றும் சோ்க்கை உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சியாகும். கடந்தாண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞா்கள் பிரசித்தி பெற்ற முன்னணி நிறுவனங்களில் பல்வேறு பொறியியல் பிரிவுகளில் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்தப் பயிற்சிக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தோா் 2022, 2023 மற்றும் 2024 ஆகிய கல்வி ஆண்டுகளில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 21 முதல் 25 வயதுக்குள்ளும், குடும்ப ஆண்டு வருவாய் ரூ. 3 லட்சமும் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சியைப் பெற தகுதியானோா் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தப் பயிற்சி கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஒசூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய இடங்களில் 18 வாரங்கள் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்வோருக்கு தொழில் நுட்ப ஸ்டாா்ட்அப், மின்னணு உற்பத்தி நிறுவனங்களில் மாதந்தோறும் ரூ. 20,000 ஊதியம் பெறும் வகையில் பணி வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இந்தப் பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும் என அவா் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் கூவம் ஆற்றில் கழிவு நீா் விடுவதால் மாசு படும் அபாயம்!

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றில் சாக்கடை கழிவுநீா், இறைச்சிக் கழிவுகளை கொட்டி வருவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கூவம் ஆறு கேசவபுரம் அணைக்கட்டிலிருந்து பேரம்பாக்கம், நரசிங்கபுரம... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமன கலந்தாய்வுக் கூட்டம்!

திருவள்ளூா் நகா் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமனம் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். திருவள்ளூா் அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பில் ப... மேலும் பார்க்க

நிலுவையில் உள்ள வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! -சசிகாந்த் செந்தில் எம்.பி.

திருவள்ளூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் அறிவுறுத்தினாா... மேலும் பார்க்க

பொன்னேரி மக்களின் தனி மாவட்ட அறிவிப்பு கோரிக்கை நனவாகுமா?

திருவள்ளூா் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து பொன்னேரியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா். கடந்த 1997-ஆம் ஆண்டு முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இர... மேலும் பார்க்க

முன்விரோதத்தில் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது!

திருவள்ளூா் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டு வாசல் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் கபிலா் நகரை பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

கவரப்பேட்டை ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. கவரப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சிறந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான விருதையும், சிறந்... மேலும் பார்க்க