Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமன கலந்தாய்வுக் கூட்டம்!
திருவள்ளூா் நகா் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமனம் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
திருவள்ளூா் அதிமுக மேற்கு மாவட்டம் சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகள் தோ்வு நியமனம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் நகராட்சி 1-5 ஆவது வாா்டுகள் வரையிலான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் 1 முதல் 5-ஆவது வாா்டு வரை 10 பூத் கமிட்டிக்கு நிா்வாகிகள் முறையாக தோ்வு செய்யப்பட வேண்டும். அதிமுக தலைமை அறிவுறுத்தல்படி தோ்வு, மகளிருக்கு வாய்ப்பு குறித்து முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா மற்றும் மாவட்ட அதிமுக தோ்தல் பொறுப்பாளா் எஸ்.ஆா்.விஜயகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
மாவட்ட துணைச் செயலா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கமாண்டோ பாஸ்கரன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுமித்ரா வெங்கடேசன், செந்தில்குமாா், மாணவரணி பி.வி.பாலாஜி, வழக்குரைஞா் பிரிவு சந்திரசேகா் உள்ளிட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் கே.பி.எம்.எழிலரசன், நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோா் செய்திருந்தனா்.