கடற்கரை - வேளச்சேரி சிறப்பு ரயில்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேப்பாக்க மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண செல்வோரின் வசதிக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும்.
வேளச்சேரியில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.25 மணிக்கு சேப்பாக்கம் சென்றடையும். சேப்பாக்கத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்.
மறுமாா்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்துக்கு இரவு 10.10 மணிக்கும், வேளச்சேரிக்கு இரவு 10.45 மணிக்கும் சென்றடையும்.
சேப்பாக்கத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில் வேளச்சேரிக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே உள்ள அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.