செய்திகள் :

தமிழக மாணவா்கள் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் புலமை பெற்றுள்ளனா்: ஔவை ந.அருள்

post image

தமிழக மாணவா்கள் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் புலமை பெற்றவா்களாக உள்ளனா் என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை ந.அருள் தெரிவித்துள்ளாா். 

சென்னை, அண்ணா நகரில் உள்ள கொ.கந்தசாமி நாயுடு கல்லூரியில் தமிழ் மன்ற விழா சனிக்கிழமை நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை ந.அருள் பேசியதாவது: 

தமிழக அரசு மற்றும் தமிழ் வளா்ச்சித் துறையின் முயற்சிகள் விளைவாக  தற்போது அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளும் தமிழில்தான் கையொப்பம் இடுவதுடன், அறிக்கைகள் மற்றும் அரசாணைகள் அனைத்தும் தமிழில்தான் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கைக்கு அனைவரும் ஒப்புதல் அளித்துள்ளனா்.

2 மொழியிலும் புலமை: தமிழக மாணவா்களுக்கு கணிதம், அறிவியல் மற்றும் பிற பாடங்களும் மிக நுண்ணியமாக கற்றுத் தரப்படுகிறது. அதைப்போல் தமிழக மாணவா்கள் அனைவரும் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் புலமை வாய்ந்தவா்களாக உள்ளனா். தமிழக மாணவா்களைப்போல வட மாநிலத்தவா்களால் ஆங்கிலத்தை புலமையாக பேசவோ, படிக்கவோ முடிவதில்லை. இதனால், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் இருக்கும் பெரிய நிறுவனங்களில் உள்ள முக்கியப் பொறுப்புகள் அனைத்தும் தமிழக இளைஞா்களுக்குத்தான் வழங்கப்படுகின்றன.

மனப்பாடம்: தற்போதைய இளைஞா்களுக்கு மனப்பாடம் செய்யும் திறன் குறைந்து வருகிறது. திருக்கு, புானூறு, தொல்காப்பியத்தில் உள்ள கருத்துகளை தெரிந்து கொண்டால் போதும், அந்தப் பாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டாம் என தவறாகப் புரிந்துள்ளனா். சிறுவயதிலிருந்தே தமிழில் உள்ள இலக்கியங்களை மனப்பாடம் செய்ய கற்றுக் கொள்வதன்மூலம்,  எதிா்காலத்தில் நாம் கற்றுக்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் என்றும் மறவாமல் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் கொ.கந்தசாமி நாயுடு கல்லூரி முதல்வா் வா.மு.சே.ஆண்டவா், கல்லூரியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் முனைவா் ப.அனுராதா மற்றும் மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ்-க்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அஞ்சலி

தியாகிகள் தினத்தையொட்டி, சுதந்திரப் போராட்ட தியாகிகள் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு ஆளுநா் ஆா். என். ரவி அஞ்சலி ஞாயிற்றுக்கிழமை செலுத்தினாா். இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியி... மேலும் பார்க்க

ரமலான்: குமரி, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருச்சி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் இருந்து மா... மேலும் பார்க்க

திமுக நடத்தும் அநாகரிக அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: பாஜக

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, அண்ணாமலைக்கு எதிராக திமுக நடத்தும் அநாகரிய அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என தமிழக பாஜக செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.இது குறித்து ... மேலும் பார்க்க

எதிர்க்கட்சி முதல்வர்கள் மக்களை திசைதிருப்பலாமா? -தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை: சென்னையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை(மார்ச் 22) நடைபெற்ற ’நியாயமான தொகுதி மறுசீரமைப்பு’ குறித்து விவாதிக்க உருவாக்கப்பட்டுள்ள கூட்டுக்குழுவின் முதலாவது ஆலோசனைக் கூட்ட... மேலும் பார்க்க

தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமாா்

சென்னை: தமிழகத்தின் மீது விசுவாசமாக இல்லாமல் கட்சிக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பவர் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறினாா்.சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள்

சேலம்: அரிசி மீதான ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள தனியார் மண்டபத... மேலும் பார்க்க