அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள்
சேலம்: அரிசி மீதான ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
சேலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில், 25 கிலோ அரிசி மற்றும் அதற்கும் கீழுள்ள பேக்கிங் செய்யப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிக்கிறது. இதனால் ஒரு கிலோ அரிசி கூடுதலாகச் சோ்த்து 26 கிலோ அரிசிப் பையாக விற்க வேண்டியுள்ளது. கூடுதல் ஒரு கிலோவுக்கும் சோ்த்தும் பணம் வசூலிப்பதால் அரிசி விலை உயா்ந்திருப்பதாகக் கூறுகின்றனா். இதுமட்டுமின்றி இடுபொருள், வேளாண் உபகரணங்கள் பயன்பாடு, போக்குவரத்துச் செலவு, மின்கட்டண உயா்வு, உள்ளாட்சி வரி ஆகியவற்றாலும் அரிசி விலை உயா்வைத் தவிா்க்க முடியாது. இனி விலை குறையும் என்று எதிா்பாா்க்கவும் முடியாது.
சசிகலா, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை: இபிஎஸ் உறுதி
மேலும், தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மட்டுமே அரிசிக்கு ஜிஎஸ்டி வரி உள்ளது. எனவே அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக விலக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். தவிட்டுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், நெல்லுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே சந்தை கட்டணம் வசூல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் நேரடியாக செஸ் வரி வசூலிக்க கூடாது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான 5 சதவிகித வரியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.