திறமை மீது நம்பிக்கை இருக்கிறது: ஆட்ட நாயகன் அசுதோஷ் ஷர்மா
ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் சோ்க்க, தில்லி 19.3 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 211 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
இக்கட்டான சூழலில் தில்லி வீரா் அசுதோஷ் சா்மா அதிரடியாக விளையாடி அணியை ‘த்ரில்’ வெற்றிக்கு வழிநடத்தினாா்.
முதல் 20 பந்துகளில் 20 ரன்களும் அடுத்த 11 பந்துகளில் 46 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
ஆட்ட நாயகன் விருதுபெற்ற பின்னர் அசுதோஷ் சர்மா பேசியதாவது:
ஷிகர் தவானுக்கு சமர்ப்பணம்
கடந்த சீசன்களில் சில இன்னிங்ஸ்களில் வெற்றிகரமாக இலக்கை முடிக்கவில்லை. ஓராண்டு முழுவதும் இதை எப்படி செய்வதென நான் இதில் கவனத்தை செலுத்தினேன்.
நான் கடைசி ஓவர் வரை விளையாடினால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
விப்ராஜ் நன்றாக விளையாடினார். அவரை அதிராடியாக விளையாடும்படி கூறினேன். அழுத்தத்திலும் அவர் அமைதியாக இருந்தார்.
இந்த விருதை எனது ஆலோசகர் ஷிகர் தவானுக்கு சமர்ப்பிக்கிறேன்.
கடைசி சீசன் எனக்கு சிறப்பாக இருந்தது. அது எனது வரலாறாகவிட்டது. அதிலிருந்து நான் நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொண்டு பலவீனங்களை சரிசெய்தேன். உள்ளூர் கிரிக்கெட்டில் இதை சோதித்து பார்த்தேன்.
நான் நம்பிக்கையுடன் இருந்தேன். அது ஆட்டத்தின் ஒரு பகுதி. மோஹித் ஒரு ரன் எடுத்தால் நான் சிக்ஸர் அடிக்கலாம் என இருந்தேன். எனது திறமை மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன் என்றார்.
கடந்த சீசனில் சுதோஷ் சர்மாவின் ஐபிஎல் இன்னிங்ஸ்:
குஜராத் அணிக்கு எதிராக 31 (17)
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 33* (15)
ராஜஸ்தான் அணிக்கு எதிராக 31 (16)
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 61 (28)