தமனின் இசையுடன் தொடங்கும் ஹைதராபாத் - லக்னெள போட்டி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு முன்னதாக தமனின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 18-ஆவது சீசன் கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கியது. இரண்டாவது போட்டியில், ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க : தாய்மொழி இனிது! தோனி கூறியதென்ன?
இந்த நிலையில், வருகின்ற மார்ச் 27 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கு முன்னதாக திடலில் மாலை 6.30 மணியளவில் இசையமைப்பாளர் தமனின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமன், “ஒஜி, குண்டூர் காரம், டாக்கு, கேம் சேஞ்சர் உள்ளிட்ட படத்தின் பாடல்கள் நமது மைதானத்தில் முதல்முறையாக பாடவுள்ளேன். நிதீஷ் ரெட்டியும் என்னுடன் பாடுவார் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் அனிருத் நிகழ்ச்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
