பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!
ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார்.
பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கணேஷ் ராம் சிங் குந்தியா எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
கடந்த 2020-21 முதல் 2024-25 வரை ஒடிசாவில் 2,832 யானைகள், புலிகள் மற்றும் பிற வன விலங்குகள் இறந்துள்ளதாகவும் அவற்றில் 806 வனவிலங்குகள் வேட்டையாடியதன் காரணமாக கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் வனவிலங்குகளைக் கொன்ற குற்றச்சாட்டுகளில் மொத்தம் 4,043 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தக் காலகட்டத்தில் யானைகள் மற்றும் பிற காட்டு விலங்குகள் தாக்குதல்களில் 799 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,962 பேர் காயமடைந்துள்ளனர்.
அமைச்சர் வழங்கிய தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், தேன்கனல் வனப்பிரிவில் 318 காட்டு விலங்குகள் உயிரிழந்துள்ளன, இது மாநிலத்தில் இந்தப்பகுதியில் பதிவான அதிக உயிரிழப்பாகும்.
அதகர் வனப் பிரிவில் 197 வன விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து அங்குல் (151), கியோஞ்சர் (129), பாலசோர் (117) நயாகர் (113), சிலிகா (103) மற்றும் கியோஞ்சர் (102) ஆகிய பகுதிகளில் வனவிலங்குகள் உயிரிழந்துள்ளதாகக் கூறினார்.
வேட்டையாடியதன் காரணமாகக் கொல்லப்பட்ட 809 வனவிலங்குகளில் தேன்கனல் வனப்பிரிவில் 75, அதைத்தொடர்ந்து நயாகரில் 63, அத்தமல்லிக் மற்றும் சிமிலிபால் தெற்கு வனவிலங்குப் பிரிவுகளில் தலா 55 என பதிவாகியுள்ளன. மேலும் அத்தகர் (50), பவுத் (31), ரெதகோல் (29), கியோஞ்சர் (29), கட்டாக் (27), ராஜ்நகர் (27), மற்றும் சட்கோசியா (26) ஆகியவை அடங்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் தேன்கனல் வனப்பகுதியில் 147 பேர் காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டதாகவும், அங்குல் பிரிவில் 76 பேர் கொல்லப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கியோஞ்சர் வனப்பிரிவில் 69 இறப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து பாரிபாடாவில் 54 மற்றும் ரூர்கலா வனப் பிரிவில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் காட்டு விலங்கு தாக்குதலால் இறந்தவரின் குடும்பத்துக்கு வனத்துறை ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.