செய்திகள் :

தமிழகத்தில் 10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

post image

தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த பணியிட மாற்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்த அறிவிப்பின்படி, நெல்லை டிஐஜியாக இருந்த டாக்டர். பா. மூர்த்தி, ஐபிஎஸ் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் டிஐஜியாக இருந்த அபினவ் குமார் ஐபிஎஸ், மதுரை மண்டல டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை காலியாக இருந்த சென்னை மாநகர காவல் உளவுப் பிரிவு -1, துணை ஆணையராக, சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக இருந்துவந்த ஆர் சக்திவேல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த ஹரிகிரண் பிரசாத், சென்னை காவல்துறையின் நலப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக டாக்டர். வி. பாஸ்கரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சந்தோஷி ஹதிமானி ஐபிஎஸ் நெல்லை சரக டிஐஜியாக பொறுப்பு வகிப்பார் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நெல்லையில் ஓய்வுபெற்ற காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறப்பு!

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், தமிழக எல்லையான ஊத்து... மேலும் பார்க்க

தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!

அடுத்தாண்டு தேர்தலில் திமுகவுடன் மட்டுமே போட்டி என்று கட்சி பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கூறினார்.சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது பொதுக... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் கைப்பேசி விற்பனையகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

விழுப்புரம் கிழக்கு பாண்டிச் சாலையிலுள்ள தனியார் கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் மையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள ரெட்டிய... மேலும் பார்க்க

அண்ணாமலையை செட் செய்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா!

எதிர்க்கட்சியினரை செட் செய்யும் பணியில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

நெருங்கும் ரமலான் பண்டிகை: சென்னையில் களைகட்டாத ஆட்டுச் சந்தை!

சென்னை: முஸ்லிம் மக்களால் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையையொட்டி சென்னை சந்தைகளுக்கு ஆடுகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் கடுமையான ஏமாற்றம் அடைந்தனர்.ரமலான் பண்டிகையை ஒட்டி, சென்னையை அடுத்த செங்குன்றம... மேலும் பார்க்க

நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த துடிக்கும் மாநில விரோதிகள்: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விரோதிகள் துடிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதற்கு எதிர்க... மேலும் பார்க்க