செய்திகள் :

கட்டணமில்லாமல் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்வது எப்படி? - மாணவர்களுக்குக் கல்வியாளரின் டிப்ஸ்!

post image

தேர்வுகளெல்லாம் முடிந்து கோடை விடுமுறை தொடங்கவிருக்கிறது. கோடை விடுமுறையில் தங்களின் பிள்ளைகள் பயனுள்ள வகையில் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் எனப் பெற்றோர்கள் விரும்புவார்கள்.

அந்தவகையில், தங்களின் பிள்ளைகள் தேவை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் எதாவது கூடுதல் மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனச் சிலர் நினைக்கக்கூடும்.

அப்படி விருப்பமுள்ளவர்கள் என்னென்ன மொழிகளை எங்கெங்குப் படிக்கலாம் எனக் கல்வியாளர் கலைமணியைத் தொடர்புகொண்டு பேசினோம்.

Online certification courses
Online certification courses

இதுதொடர்பாக பேசிய அவர், "பள்ளி மாணவர்களுக்கு என்று நிறையக் கட்டணமில்லா ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் (Online certification courses) இருக்கின்றன.

குறிப்பாக, மொழிப் பயிற்சி (language training) படிப்புகள் நிறைய இருக்கின்றன. சில படிப்புகளுக்குக் கட்டணம் இல்லை. சில படிப்புகளுக்குக் கட்டணம் இருக்கின்றன.

இந்தக் கோடை விடுமுறையில் நிறையப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மொழிப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

அவர்கள் பிரிட்டிஷ் கவுன்சில் அல்லது கேம்பிரிட்ஜ் அசஸ்மென்ட் போன்ற கல்வி அமைப்புகளுக்கு அனுப்பி வைத்தால் நன்றாக இருக்கும்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பு மொழிப் பயிற்சி வகுப்புகளைக் கற்றுத்தருகிறார்கள்.

அங்கு நேரில் சென்று பயில முடியாதவர்கள் அவர்கள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து கற்றுக்கொள்ளலாம்.

இந்தியாவில் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொண்டால் வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

ஜெர்மன், ஜாப்பனீஸ் போன்ற நிறைய வெளிநாட்டு கம்பெனிகள் நம் தமிழ்நாட்டில் வேலை செய்ய ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு டிகிரி முடித்திருப்பதை விட அவர்கள் நாட்டு மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அதனால் இந்த விடுமுறை நாட்களில் ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளலாம். நேரில் சென்றுதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

English and Foreign Language University
English and Foreign Language University

ஆன்லைன் மூலமாகவே கற்றுக்கொள்ளலாம். அதனை இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம். ‘English and Foreign Language University’ என்று ஐதராபாத்தில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது.

அந்த பல்கலைக்கழகத்தின் வெப்சைட்டில் ஜெர்மன், ஜாப்பனிஸ் போன்ற மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம்.

யாரெல்லாம் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளைப் படிக்க இருக்கின்றார்களோ அவர்கள் இந்த மொழிகளைக் கற்றுக்கொள்வது நல்லது.

அவர்களுக்கு வெளிநாட்டில் நல்ல வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஜெர்மன் கற்றுக்கொண்டாலும் சான்றிதழ் இல்லாமல் வேலைக்குச் செல்ல முடியாது.

ஜெர்மன் மொழி கற்றுக்கொண்டதற்கான சான்றிதழை வாங்க வேண்டும் என்றால் ‘Goethe’ என்று சென்னையில் இன்ஸ்டிடியூஷன் ஒன்று இருக்கிறது. அதில் தேர்வுகள் நடத்தப்படும்.

நீங்கள் வெளியில் மொழியைக் கற்றுக்கொண்டு இந்த இன்ஸ்டிடியூஷனில் தேர்வு எழுதி அதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோல ஜப்பானிஸ் பொறுத்தவரைக்கும் 5 கட்ட தேர்வுகள் இருக்கிறது. இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்கள் இந்த ஜப்பானிஸ் மொழியைக் கற்றுக்கொண்டு ‘Abk Aots Dosokai’ என்ற இன்ஸ்டிடியூசன் ஒன்று இருக்கிறது. அங்குச் சென்று தேர்வுகளை எழுதி சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Swayam
Swayam

வெளிநாட்டில் இலவசமாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகின்ற மாணவர்கள் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இலவச ஆன்லைன் கற்றல் தளமான ‘Swayam’ போர்ட்டலில் நிறையச் சான்றிதழ் படிப்புகள் இருக்கிறது.

அதனைக் கற்றுக்கொண்டு நிறையச் சான்றிதழ்களைப் பெற்று இருந்தால் வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலிருந்து உதவித்தொகைகளைப் பெற முடியும். இதன் மூலம் வெளிநாட்டில் மாணவர்கள் இலவசமாகப் படிக்க முடியும்.

9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்கூட இந்த ‘Swayam’ போர்ட்டலில் சான்றிதழ் படிப்புகளைப் படிக்க முடியும்.

இந்த மாதிரியான பயிற்சி வகுப்புகளை எல்லாம் மேல்தட்டு மக்கள்தான் பயிலுகிறார்கள். சாதாரண மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது.

ஏதேனும் விருப்பப்படும் மொழியைப் பயின்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வைத்திருந்தால் அது பிற்காலத்தில் உதவும்” என்று அறிவுறுத்தினார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

"UPSC தேர்வு எழுத Self confidence முக்கியம்" - UPSC Coaching Trainer Vagini Sri | Kalvi Vikatan

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |80களில் தூத்துக்குடிய... மேலும் பார்க்க

AI படிப்பதற்கு இது சரியான காலகட்டமா... தனியார் பயிற்சி மையங்களில் பயிலலாமா?- கல்வியாளர் சொல்வதென்ன?

எங்கு நோக்கினும் AI என்னும் Artificial Intelligence பற்றியே பேசிக்கொண்டிருக்கும் காலம் இது. எந்தத் துறையை எடுத்தாலும் அதில் AI-இன் பங்கு அதிகமாகிக் கொண்டே இருப்பதாக சொல்கிறார்கள். இந்த விஷயம் பெற்றோர்... மேலும் பார்க்க

Scholarship: வருஷத்துக்கு ரூ.12,000 டு 20,000 -மத்திய அரசின் இந்த கல்வி உதவித்தொகையை பெறுவது எப்படி?

மாநில அரசும், மத்திய அரசும் மாணவர்களுக்கு என நிறைய கல்வி ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது. ஆனால் பெரும்பாபாலான மாணவர்களுக்கு இதுப் பற்றிய விழிப்புணர்வு பெரிதாக இல்லை. சமூக பொருளாதார சூழலால் விளிம்பு நிலை... மேலும் பார்க்க

மதுரை: UPSC / TNPSC குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம்.!

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் யூ.பி.எஸ்.சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் மதுரையில் நடைபெறவுள்ளது. குரூப் தேர்வு வருகின்ற மார்ச் 23... மேலும் பார்க்க