பாலஸ்தீன இயக்குநர் கைது விவகாரம்: மன்னிப்புக் கேட்ட ஆஸ்கர் விருதுக் குழு!
ரஹானேவின் கோரிக்கையை நிராகரித்த ஈடன் கார்டன் பிட்ச் மேற்பார்வையாளர்!
பிட்சை மாற்றும்படி கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானேவின் கோரிக்கையை ஈடன் கார்டன் திடலின் பிட்ச் மேற்பார்வையாளர் நிராகரித்துள்ளார்.
நடப்பு சாம்பியன் கேகேஆர் தனது முதல் போட்டியிலேயே ஆர்சிபியுடன் தோல்வியுற்றது அதன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
36 வயதாகும் ரஹானே அடுத்து வரும் ஐபிஎல் போட்டிகளில் தங்களது அணிக்கு ஏற்றவாரு ஈடன் கார்டன் திடலின் பிட்சினை மாற்றும்படி கூறியுள்ளார்.
70 வயதாகும் ஈடன் கார்டன் திடலின் பிட்ச் மேற்பார்வையாளர் சுஜன் முகர்ஜி கூறியதாவது:
ஈடன் கார்டன் பிட்ச்சை மாற்ற முடியாது
நான் இங்கிருக்கும்வரை ஈடன் கார்டன் பிட்ச் மாறாது. ஐபிஎல் விதிகளின்படி ஒரு அணி அதன் பிட்ச்சினை மாற்றும்படி கூறக்கூடாது.
நான் பொறுப்பேற்றதில் இருந்து பிட்ச் இப்படித்தான் இருக்கிறது. கடந்த காலங்களில் பிட்ச் இப்படித்தான் இருந்தது. இப்போது எதுவும் மாறவில்லை. வருங்காலத்திலும் பிட்ச் மாறப்போவதில்லை.
ஆர்சிபி சுழல் பந்துவீச்சாளர்கள் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். கேகேஆர் சுழல் பந்துவீச்சாளர்கள் எத்தனை எடுத்தார்கள்? க்ருணால் பாண்டிய 3 விக்கெட்டுகள் எடுத்தார். சுயாஷ் சர்மா பந்தினை திருப்பி ரஸ்ஸலின் விக்கெட்டை வீழ்த்தினார் என்றார்.
கடந்த முறை சாம்பியன் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் தங்களது அணிக்கு சொந்த மண் சாதகம் இல்லையெனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிட்ச் மேற்பார்வையாளரின் கருத்தினால் கேகேஆர் அணி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய போட்டியில் சுனில் நரைனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் முன்னாள் ஆல்-ரவுண்டர் மொயின் அலி விளையாடுகிறார்.