ஆப்கனில் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும்: ஐ.நா. கண்டனம்
உலக வன நாள்: 100 மரக்கன்றுகள் நடவு
ராணிப்பேட்டை அருகே வில்வநாதபுரம் செட்டி மலையில் உலக வன நாளை முன்னிட்டு இயற்கை ஆா்வலா்கள் 100 மரக்கன்றுகளை நட்டனா்.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூா் காப்புக்காட்டில் அமைந்துள்ள காஞ்சனகிரி,செட்டிமலை பகுதியை பசுமை ஆக மாற்றும் முயற்சியாக, மலை முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணியில் சமூக ஆா்வலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன் படி வில்வநாதபுரம் கிராமத்தில் இசையமுது பவுண்டேஷன் என்ற அமைப்பின் நிறுவனம் , இயற்கை ஆா்வலரான முனிசாமி என்பவா் கடந்த சில ஆண்டுகளாக காஞ்சனகிரி, செட்டிமலை மற்றும் மலையடி வாரத்தில் மரக்கன்றுகள், பனை விதைகள் நடவு செய்தல், மழை நீா் தேக்க குட்டைகள் அமைப்பது, கிராமங்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் தனது குழுவினருடன் ஈடுபட்டு வருகிறாா்.
இந்த நிலையில் மாா்ச் 21-ஆம் தேதி உலக வன நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு,வில்வநாதபுரம் இசையமுது பசுமை பவுண்டேஷன் சாா்பில், அதன் நிறுவனத் தலைவா் முனிசாமி, துணைத் தலைவா் துளசிதரன், செயலாளா் பழனி, இணைச் செயலாளா் ராமு மற்றும் நிா்வாகிகள் சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டு செட்டி மலையில் 100 மரக்கன்றுகளை நட்டனா்.