தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமாா்
சென்னை: தமிழகத்தின் மீது விசுவாசமாக இல்லாமல் கட்சிக்கும் மட்டுமே விசுவாசமாக இருப்பவர் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறினாா்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக்குழு கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாா் பங்கேற்றாா்.
இந்த நிலையில் பெங்களூரு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுடன் பேசியதாவது:
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அண்ணாமலை கூறும் கருத்து முக்கியம் இல்லை. இந்த விவகாரத்தில் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நாட்டுக்கு என்ன சொல்கிறாா்கள் என்பதுதான் முக்கியம். அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது. அவர் கட்சி கொடுத்த வேலையை மட்டுமே செய்கிறார். கட்சிக்கு மட்டுமே அதிக விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறாா். ஆனால், தமிழகத்தின் மீது அவருக்கு விசுவாசம் இல்லை என்றாா்.