பாகிஸ்தான் ஒருநாள் தொடர்: வில்லியம்சன், ரச்சின் உள்பட 5 பேருக்கு அணியில் இடமில்ல...
கோவை: ரயில் மறியலில் ஈடுபட்ட முயன்ற 19 விவசாயிகள் கைது
கோவையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 19 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.
வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் மாநில விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் கோவை ரயில் நிலையத்தில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
கட்சிகள் சாா்பற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சண்முகம், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் வேலுசாமி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டதோடு, ரயில் மறியலில் ஈடுபடவும் முயற்சித்தனா்.
இதையடுத்து, அவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா் 19 பேரைக் கைது செய்தனா். பின்னா், அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.