தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை
இன்றைய மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து
கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியில் மேயா், ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வார குறைகேட்புக் கூட்டம் நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.