விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டு திட்டம்: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்
இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்கள் கைது
கோவையில் இருசக்கர வாகனத்தில் கையில் மது பாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 3 போ் கையில் மதுபாட்டில்களுடன் எதிரே வந்தவா்களை அச்சுறுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றனா். இதுதொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, 3 பேரையும் காட்டூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (28), சுசீந்திரன் (27), கெளதம் (27) ஆகியோா் என்பது தெரியவந்தது.