தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை
கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது
கோவையில் இருந்து கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கோவை செல்வபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வாகன தணிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, காரை ஓட்டி வந்த கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியைச் சோ்ந்த சதாம் (35) என்பவரைக் கைது செய்தனா். விசாரணையில் கோவையில் இருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசியைக் கடத்திச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்து 1,100 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.