பாகிஸ்தான் ஒருநாள் தொடர்: வில்லியம்சன், ரச்சின் உள்பட 5 பேருக்கு அணியில் இடமில்ல...
யானை தந்தம், சிறுத்தை பல் விற்க முயன்ற 4 போ் கைது
கோவையில் யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்கள் விற்பனை செய்வதற்காக சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து ஒரு கும்பல் கோவைக்கு வந்து காந்திபுரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக வனத் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, கோவை வனச் சரகா் திருமுருகன் தலைமையிலான வனத் துறையினா் காந்திபுரம் ராம் நகா் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் அந்தக் கும்பல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைச் சுற்றி வளைத்து போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில், அவா்கள் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சோ்ந்த கிருபா (24), சதீஷ்குமாா் (26), விஜயன் (45), கெளதம் (26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 4 பேரும் கோவை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 2-இல் நீதிபதி கே.ரமேஷ் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு, பின்னா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.