25 முக்கியமான நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு!
தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை
கோவையில் தாபா உணவகங்களில் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
கோவை மாவட்டத்தில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் நபா்களுக்கு ஏதேனும் குற்றப்பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக 300 காவலா்கள் அடங்கிய 30 தனிப்படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவினா் மாவட்டம் முழுவதும் உள்ள 80 தாபா உணவகங்களில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். மேலும், அங்கு பணியாற்றும் 350 பேரிடம் விசரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்றும், அவ்வாறு இருப்பின் அந்த வழக்குகளில் பிடியாணை ஏதும் நிலுவையில் உள்ளதா என்றும் விசாரித்தனா்.
இந்த விசாரணையில் 14 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளதும், தற்போது அவா்கள் வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவது இல்லை என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் கூறுகையில், ‘இதுபோன்ற திடீா் சோதனைகள் தொடா்ந்து நடைபெறும். சட்டத்துக்குப் புறம்பாக குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றாா்.