செய்திகள் :

``தோல்வியே அறியாத முடிசூடா மன்னன் நான்; பாஜக-வால் தோற்றுவிட்டேன்" - ஜெயக்குமார் ஓப்பன் டாக்

post image

2021 சட்டமன்றத் தேர்தலில் 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

அதற்கேற்ப நேற்று (மார்ச் 25) எடப்பாடி பழனிசாமி மற்றும்  முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர். டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர்கள், அதன் பிறகு  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இலத்துக்கே நேரில் சென்று சந்திருந்து பேசியிருப்பது 'அ.தி.மு.க - பா.ஜ.க' கூட்டணிப் பேச்சுகளை கிளப்பி விட்டிருக்கிறது.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

சென்னை, ராயபுரம் தொகுதியில் தொடர் வெற்றிக் கண்ட ஜெயக்குமார் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வைத்த கடந்த 2021 தேர்தலில் தோல்வியுற்றார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பு குறித்தும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார்.

இது குறித்துப் பேசியிருக்கும் ஜெயக்குமார், "பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்ததால்தான் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்தது. எங்களுடைய ஆட்சி போனதற்குக் காரணமே 'பா.ஜ.க'தான். ராயபுரம் தொகுதியில் தோல்வியே கணாத முடிசூடா மன்னனாக இருந்தவன் நான். 25 ஆண்டுகள் தோல்வியையே நான் பார்த்ததில்லை. தோல்வியே அறியாதவன். என்னுடைய தோல்விக்கும் 'பா.ஜ.க'தான் காரணம்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'பா.ஜ.க' உடன் கூட்டணி வைக்கும்போதே என் தொகுதியில் இருக்கும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் என்னிடம் 'பா.ஜ.க' கூட்டணி வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறினார்கள். தேர்தல் முடிந்த பிறகு அவர்களை கழட்டிவிட்டுவிடலாம் என நான் அவர்களிடம் கூறியிருந்தேன். அதேபோல தேர்தலுக்குப் பிறகு கழட்டிவிட்டோம். 'பா.ஜ.க'வுடன் கூட்டணி வைத்ததால்தான் என் தொகுதியில் இருக்கும் 40,000 சிறுபான்மையினர் ஓட்டுகள் எனக்குக் கிடைக்காமல் போனது. இன்று சட்டமன்றத்திற்குப் போக வேண்டிய நான், என் தொகுதியிலேயே தோல்வியுற்று இருக்கிறேன். மனம் திறந்து சொல்கிறேன். என் தோல்விக்கும், அ.தி.மு.க தோல்விக்கும் 'பா.ஜ.க'தான் காரணம்" என்று பேசியிருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

`இது ஃபெயிலான சட்டமன்றம்' - அதிமுக எம்.எல்.ஏ கமென்ட்; சூடான சபாநாயகர்! - என்ன நடந்தது?

2021 தேர்தல் அறிக்கையில், ‘ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படும்’ என தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் 150 நாள்களுக்கு குறைவாகத்தான் சட்டமன்றம் கூட்... மேலும் பார்க்க

வாரணாசி: நவராத்திரியில் சாலையில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் ரத்து; இறைச்சிக் கடைகளுக்குத் தடை

நவராத்திரி திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம் முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகை வரும் திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது.இதனால் உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு ப... மேலும் பார்க்க

கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி; வெளியேறிய அமைச்சர்

கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் வேலை நடைபெற்ற வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளர்கள... மேலும் பார்க்க

`தெற்கின் மேல் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பு...' - உகாதி வாழ்த்துச் செய்தியில் முதல்வர்!

நாளை தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கான புத்தாண்டு விழாவான உகாதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.முதல்வரின் Ugadi வாழ்த்து செய்தி:-திராவிட மொழ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து செங்கோட்டையன்; டெல்லிக்குப் படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பல சிக்கல்களால், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க

தவெக: "அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து இன்று பேசியிருக்கிறார். அப்போது, "நேற்று( மார்ச் 28) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பொதுமக்... மேலும் பார்க்க