நீட் தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட விவகாரம்: முக்கிய குற்றவாளி தலைமறைவு!
ஹரியாணாவில் 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன யோகா ஆசிரியர் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹரியாணா ரோட்டாக் நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வந்த யோகா ஆசிரியர் ஜக்தீப் (45). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் சென்ற பகுதிகளின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினர் முக்கியக் குற்றவாளி ராஜ்கரண் என்பவரின் கூட்டாளிகள் இருவரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் உண்மை தெரிய வந்துள்ளது.
ராஜ்கரணுக்கு சொந்தமான வீட்டில் ஜக்தீப் முன்பு வாடகைக்கு தங்கியிருந்தார். அப்போது, ராஜ்கரணின் மனைவியுடன் அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தகாத உறவில் இருப்பதைக் ராஜ்கரண் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால், கோபம்கொண்ட அவர் கடந்த டிசம்பர் மாதம் ஜக்தீப்பை ஆட்கள் வைத்து கடத்தினார். ஜக்தீப்பின் வாய், கை, கால்களை கயிற்றால் கட்டி ’சர்க்கி தத்ரி’ என்ற பகுதிக்கு அவரைக் கடத்திச் சென்றனர்.
அங்கு ஆள்நடமாட்டமில்லாத மணல் பகுதியில் 7 அடி ஆழத்தில் குழி தோண்டி அவரை உயிருடன் புதைத்ததாகக் குற்றவாளிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் ராஜ்கரண் உள்பட 4 பேர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கைதான குற்றவாளிகள் கொடுத்தத் தகவலின்படி காவல்துறையினர் ஜக்தீப்பை புதைத்த இடத்துக்குச் சென்று நீண்ட தேடுதலுக்குப் பிறகு அவரது உடலை தோண்டியெடுத்தனர்.
தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான ராஜ்கரணை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.