சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு சாதகமான சூழல் இல்லையா? புஜாராவுக்கு அதிர்ச்சியளித்...
Rabada : 'கிரிக்கெட்டின் பெயரை 'பேட்டிங்' என்று மாற்றி விடுங்கள்! - ரபாடா ஆதங்கம்
18 வது ஐ.பி.எல் சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. கடந்த சீசனைப் போல இந்த சீசனிலும் 200+ ஸ்கோர்கள் மிக எளிதாக வந்துகொண்டிருக்கிறது. இதுவரைக்கும் நடந்திருக்கும் 5 போட்டிகளில் 3 போட்டிகளில் 200+ ஸ்கோர்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

சன்ரைசர்ஸ் அணி ஒரு போட்டியில் 286 ரன்களை கூட எடுத்திருந்தது. ஐ.பி.எல் முழுக்க முழுக்க பேட்டருக்கு சாதகமாக மாறி நிற்கிறது. இந்நிலையில், குஜராத் அணிக்காக ஆடி வரும் ரபாடா இந்த போக்குக்கு எதிராக கடுமையான ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரபாடாவின் ஆதங்கம்!
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் ரபாடா, 'இந்த விளையாட்டு பரிணமித்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். ஆனால், அதற்காக ப்ளாட்டாக ஒரே மாதிரியாக எல்லா போட்டிகளும் மாறிவிடக்கூடாது. போட்டியின் பொழுதுபோக்குத் தன்மையையே அது கெடுத்துவிடும்.

இப்படியே தொடர்ந்தால் கிரிக்கெட் என்கிற பெயரையே மாற்றி விட்டு இந்த விளையாட்டுக்கு 'பேட்டிங்' என பெயரை மாற்றிவிடலாம். நிறைய ரெக்கார்டுகள் உடைக்கப்படுவதில் மகிழ்ச்சி. கூடுதலான ஸ்கோர்களை எடுக்கும் போட்டிகளை வரவேற்கிறேன். ஆனால், அதேமாதிரிதான் குறைவான ஸ்கோர் வரக்கூடிய ஆட்டங்களையும் வரவேற்க வேண்டும்.
எதோ ஒரு பக்கம் முழுமையாக போட்டிகள் சாய்ந்துவிடக்கூடாது. இரண்டு விதமான போட்டிகளுக்கு இடையேயையும் ஒருவித சமநிலை இருக்க வேண்டும்.' எனக் கூறியிருக்கிறார்.
ரபாடாவின் கருத்தைப் பற்றிய உங்களின் எண்ணங்களை கமெண்ட் செய்யுங்கள்