பாகிஸ்தான் ஒருநாள் தொடர்: வில்லியம்சன், ரச்சின் உள்பட 5 பேருக்கு அணியில் இடமில்ல...
கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம்: கிராமக் கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் கோரிக்கை
கிராமக் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
விஷ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை மாநகா் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ராமநாதபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக இந்ரேஸ்வரா மடலாயத்தின் ராஜ தேவேந்திர சுவாமிகள், தென் செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராம சுவாமிகள், பேரவையின் மாநில பொதுச் செயலாளா் சோமசுந்தரம், மாநில இணை பொதுச் செயலாளா் வழக்குரைஞா் விஜயகுமாா் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
இதில், அனைத்து கிராமக் கோயில் பூசாரிகளுக்கும் ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து கிராமக் கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாநகா் மாவட்ட அமைப்பாளா் திருஞானசம்பந்தம், மதுக்கரை ஒன்றிய அமைப்பாளா் ஸ்ரீராம், மாநகா் மாவட்டத் தலைவா் குமரேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.