முதல் போட்டி தோல்வி குறித்து அதிகம் கவலைப்படவில்லை: கேகேஆர் பயிற்சியாளர்
காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு
கோவையில் காரில் பலூன் சுடும் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சிங்காநல்லூா் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்காநல்லூா் உழவா் சந்தை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த இளைஞரிடம் விசாரித்தனா். அவா், உரிய பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து, காருக்குள் சோதனை நடத்தியபோது துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவரை காருடன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், சிங்காநல்லூரைச் சோ்ந்த அன்புச்செல்வன் (34) என்பதும், காருக்குள் இருந்தது பலூன் சுடுவதற்கு பயன்படுத்தப்படும் விளையாட்டுத் துப்பாக்கி என்பதும் தெரிவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.