செய்திகள் :

ரமலான்: குமரி, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள்

post image

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருச்சி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்தில் இருந்து மாா்ச் 28-ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06037) மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து மாா்ச் 31-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06038) மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இதில் படுக்கை வசதி கொண்ட 14 பெட்டிகள், இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்சி: திருச்சி - தாம்பரம் இடையே மாா்ச் 29 முதல் 31- ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06048) பகல் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06047) இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும். இதில் இருக்கை வசதி கொண்ட இரு ஏசி வகுப்பு பெட்டிகள் மற்றும் 10 சாதாரண பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை - பெங்களூரு: பெங்களூரில் இருந்து மாா்ச் 28-ஆம் தேதி காலை 8.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07319) பிற்பகல் 2.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 07320) இரவு 10.50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் யஷ்வந்த்பூா், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலாா்பேட்டை, ஆம்பூா், குடியாத்தம், காட்பாடி, சோளிங்கபுரம், அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்... மேலும் பார்க்க

மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, இரு மொழிகளே போதும் என்பவர்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம்; இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள்தான் நாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில்... மேலும் பார்க்க

தில்லியில் முக்கிய பிரமுகருடன் சந்திப்பா? இபிஎஸ் பதில்

தில்லி பயணம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு பயணம் மேற்கொண்டி... மேலும் பார்க்க

இபிஎஸ் தில்லியில் யாரைப் பார்க்கப் போகிறார் என்று தெரியும்: முதல்வர் ஸ்டாலின்

இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு யாரைப் பார்க்கப் போகிறார் என்றும் தெரியும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைதான இளைஞர் பலி: போலீஸார் விசாரணை!

கோவை மத்திய சிறையில்போக்சோ வழக்கில் கைதான இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மத்திய சிறைச் சாலையில், ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் ஈரோடு ... மேலும் பார்க்க

கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத் திணறி பலி!

கோவை : கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏறி கீழே இறங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் பலியானார்.கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு ம... மேலும் பார்க்க