அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள்
மணிப்பூரில் இருந்து 27 மியான்மர் நாட்டவர் நாடு கடத்தல்
மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்த 27 மியான்மர் நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
மணிப்பூர் மாநிலம், தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள மோரேயில் உள்ள இந்தோ - மியான்மர் வாயிலில் ஒரு மைனர் உள்பட 27 பேர் அண்டை நாட்டு அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் இம்பாலில் உள்ள சஜிவா சிறையில் உள்ள வெளிநாட்டினர் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.
சிறை தண்டனை முடிந்த நிலையில் மியான்மர் நாட்டவர்களை இந்திய அதிகாரிகள் திருப்பி அனுப்பினர் என்று அதிகாரி ஒருவர் மேலும் கூறினார்.
வடகிழக்கு மாநிலத்தில் நடந்து வரும் இனக் கலவரத்துக்கு மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களே பெரும்பாலும் காரணம் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
ஜார்க்கண்டில் கருகிய நிலையில் இரட்டை குழந்தைகள், பெண்ணின் சடலங்கள் மீட்பு
மணிப்பூரில் மைதேயி - குகி ஆகிய இரு பழங்குடி சமூகத்தினரிடையே நீடித்து வரும் மோதலில் இதுவரை 250 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இதையடுத்து முதல்வர் பதவியை பிரேன் சிங் அண்மையில் ராஜிநாமா செய்ததால் அங்கு பிப்ரவரி 13ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.