செய்திகள் :

தெலங்கானாவில் திடீரென வெடித்த குப்பைத் தொட்டி- தூய்மைப் பணியாளர் பலி

post image

தெலங்கானாவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்ததில் தூய்மை பணியாளர் பலியானார்.

தெலங்கானா மாநிலம், குசாய்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்ற தூய்மைப் பணியாளரான நாகராஜு சனிக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென்று குப்பை தொட்டியில் இருந்த மர்ம பொருள் வெடித்துச் சிதறியது.

இந்த சம்பவத்தில் தூய்மைப் பணியாளர் நாகராஜு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே அந்த பகுதி மக்கள் குசாய்குடா போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் நாகராஜூ உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடியில் பதிவாகியுள்ளது.

கா்நாடகத்தில் முஸ்லிம் இடஒதுக்கீடு விவகாரம்: பாஜக அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

புது தில்லி: அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் கா்நாடக அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை திங்கள்கிழமை நாள் முழுவதும் ... மேலும் பார்க்க

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 44% அதிகரிப்பு!

நாடு முழுவதும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 44% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி 250 கோடி பேர் உள்நாட்டில் சுற்றுலா சென்றுள்ளதாகவும், இதில் சுற்றுல... மேலும் பார்க்க

ஏப். 14-ல் ஹரியாணா செல்கிறார் பிரதமர் மோடி!

புதிய விமான நிலையம் திறப்பதற்காக ஏப். 14ஆம் தேதி ஹரியாணா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை!

தீவிபத்தின்போது கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.மாா... மேலும் பார்க்க

மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

புது தில்லி: உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது நாடெங்கிலும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு: வெளியானது அறிவிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை உயர்த்தி வழங்குவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு நடைமுறைக்கு வரு... மேலும் பார்க்க