Dhoni: "ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்..." - Impact Player விதி க...
Google Review: விடுதி குறையை ஆன்லைனில் சுட்டிக் காட்டிய மாணவர் மீது தாக்குதல்; நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம் மங்களூரில், ஆன்லைனில் எதிர்மறையான விமர்சனம் எழுதியதற்காக 18 வயது பொறியியல் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகியைச் சேர்ந்த விகாஸ் என்ற மாணவர், கடந்த ஆறு மாதங்களாக மங்களூரில் உள்ள ஒரு பணம் செலுத்தும் விருந்தினர் (PG) விடுதியில் தங்கியிருந்தார்.

அங்கு மோசமான சுகாதாரம், அசுத்தமான கழிப்பறைகள் மற்றும் உணவில் பூச்சிகள் இருப்பது போன்ற குறைகளைக் சுட்டிக் காட்டி கூகிளில் அந்த விடுதிக்கு ஒரு நட்சத்திர மதிப்பீடு வழங்கியிருக்கிறார். இது குறித்து PG விடுதியின் உரிமையாளர் சந்தோஷ் விகாஸை தொடர்புகொண்டு மதிப்பாய்வை நீக்கும்படி கோரியதாக கூறப்படுகிறது.
விகாஸ் மறுத்துவிட்டதால், சந்தோஷ் மற்றும் அவருடன் இருந்த நான்கு பேர் விகாஸை மிரட்டி தாக்கி மதிப்பாய்வை வலுக்கட்டாயமாக நீக்கச் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் மார்ச் 17-ம் தேதி இரவு கத்ரி காவல் நிலைய எல்லைக்குள் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விகாஸ் அளித்த புகாரின் பேரில் PG உரிமையாளர் சந்தோஷ் மற்றும் அவரது நான்கு கூட்டாளிகளுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
