பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
வாணியம்பாடி: நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து - பொதுத்தேர்வுக்கு சென்ற +2 மாணவி ஓடிசென்று ஏறிய கொடுமை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள கொத்தக்கோட்டை கிராமத்தில் இன்று காலை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவி ஒருவர் தனது கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து நிற்கவில்லை. மாணவி சீருடையில் இருப்பதை கவனித்தும் ஓட்டுநர் நிறுத்தாமல் பேருந்தை வேகமாக இயக்கினார்.

பரீட்சைக்கு தாமதமானதால் பதறிப்போன மாணவி பேருந்துக்கு பின்னால் வேகமாக ஓடிசென்று பேருந்தில் ஏறினார். இந்த காட்சிகளை பின்னால் பைக்கில் வந்த நபர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த காட்சிகளை பார்க்கும்போது பதற வைக்கிறது.
`ஏதாவது விபரீதம் ஏற்பட்டிருந்தால்?’
``ஏதாவது விபரீதம் ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது? ஒருவேளை அந்த ஓட்டுநர் அல்லது நடத்துநரின் மகளாக இருந்தால், இவர்கள் இதுபோலத்தான் அநாகரிகமாக நடந்துகொள்வார்களா? அரசுப் பேருந்துகளில் இதுபோன்ற அவலங்கள் தொடர்கின்றன. சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கிராம மக்கள் கொதித்து பேசியிருக்கின்றனர்.

இந்த நிலையில், ஓட்டுநர் முனிராஜை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். அதேபோல, நடத்துனர் அசோக் குமார் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தவர் என்பதால், அவர் பணியில் இருந்தே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play