செய்திகள் :

`பல பெண்களுடன் தொடர்பு; பெரும் சித்ரவதை, எனவேதான்...' - தாயுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் `பகீர்!'

post image

பெங்களூரு புறநகர் பகுதியான சிக்கவனபாரா என்ற இடத்தில் தனியாக நின்ற காரில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணையை தொடங்கினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவரின் பெயர் லோக்நாத் சிங் (37) என்று தெரிய வந்தது. அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி லோக்நாத் சிங்கின் மனைவி யஷ்வினி மற்றும் அவரது தாயார் ஹேமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேரும் சேர்ந்து லோக்நாத்தின் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

யஷ்வினி

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் சைதுல் கூறுகையில்,' 'லோக்நாத்தும் யஷ்வினியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே இருந்த வயது வித்தியாசம் காரணமாக அவர்களது திருமணத்திற்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதனால் இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் தான் யஷ்வினியின் பெற்றோருக்கு அவரது திருமணம் குறித்த தகவல் தெரிய வந்தது. ஆனால் லோக்நாத்திற்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது யஷ்வினிக்கு தெரிய வந்தது. இதனால் இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் விவாகரத்து செய்யும் அளவுக்கு சென்றுள்ளனர். அதோடு லோக்நாத் சில சட்டவிரோத தொழில்களையும் செய்து வந்தது யஷ்வினிக்கு தெரிய வந்தது.

லோக்நாத் தனது மனைவிக்கு போன் செய்து வீட்டிற்கு வருவதாக தெரிவித்துள்ளார். லோக்நாத் தனது சகோதரியிடம் சொல்லிவிட்டு யஷ்வினி வீட்டிற்கு காரில் புறப்பட்டார். யஷ்வினியும், அவரது தாயாரும் சேர்ந்து வீட்டில் உணவு தயாரித்தனர். அதில் தூக்க மாத்திரையை கலந்தனர். லோக்நாத் வரும்போதே பீர் பாட்டில்களை அதிக அளவு வாங்கி வந்திருந்தார். அவர் தனது மனைவி யஷ்வினியை அழைத்துக்கொண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு காரில் புறப்பட்டார்.

காரில் இருக்கும்போது லோக்நாத் அதிக அளவில் மது அருந்தி இருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தூக்க மாத்திரை கலந்த சாப்பாட்டை அதிக அளவில் லோக்நாத் சாப்பிட கொடுத்துள்ளார் யஷ்வினி. அதனை சாப்பிட்ட உடன் லோக்நாத்திற்கு தூக்கம் வர ஆரம்பித்தது. உடனே யஷ்வினி தனது தாயாருக்கு இருவரும் இருக்கும் இடம் தொடர்பான தகவலை அனுப்பி இருக்கிறார். அவரது தாயார் ஹேமா கத்தியுடன் வந்தார். ஹேமா லோக்நாத்தின் கழுத்தில் கத்தியால் குத்தினார். உடனே லோக்நாத் சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க 150 மீட்டர் தூரத்திற்கு ஓடினார். அவர் தனது காருக்கு பின்புறம் மறைந்து கொள்ள முயன்றார். அவரை கத்தியால் குத்திய தாயும், மகளும் ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றுவிட்டனர். அந்த வழியாக வந்தவர்கள் லோக்நாத் காரில் இறந்து கிடப்பதை பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்'' என்றார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரித்தபோது, லோக்நாத் கடந்த 2023ம் ஆண்டில் இருந்து யஷ்வினி குடும்பத்தை மிரட்டி வந்துள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்தே யஷ்வினி அவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு, தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் யஷ்வினியை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.

தாயார் வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து அங்கு வந்து மிரட்டிக்கொண்டிருந்தார். தன்னுடன் வந்து வாழவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார். அதன் பிறகுதான் இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண லோக்நாத்தை கொலை செய்ய தாயும் மகளும் சேர்ந்து முடிவு செய்தது தெரிய வந்துள்ளது.

மதுரை: இயக்குநர் வீட்டில் களவு; `5 நாள்களாகியும் விசாரணை இல்லை...' - காவல்துறை மீது குற்றச்சாட்டு!

எழுத்தாளரும் இயக்குநருமான லக்ஷ்மி சரவணக்குமார் தனது வீட்டில் பணம், நகை திருடப்பட்டுவிட்டதாகவும், அது குறித்து புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.தனியாக வாழும்... மேலும் பார்க்க

சிவகங்கை: பயிற்சி மருத்துவருக்குப் பாலியல் தொல்லை; நள்ளிரவு மருத்துவக் கல்லூரியில் என்ன நடந்தது?

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நேற்று (மார்ச் 24) இரவு விடுதிக்குச் சென்ற பயிற்சி மருத்துவர் மீது பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் `பல' செயின் பறிப்புச் சம்பவங்கள்; அலறிய வாக்கி டாக்கிகள் - சிக்கிய உபி இளைஞர்கள்!

சென்னை, திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் இன்று காலை பெண் ஒருவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இருவர், பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில்... மேலும் பார்க்க

காதலனுடன் சேர திட்டம்; திருமணமான இரண்டு வாரங்களில் கணவனை ஆள்வைத்து கொன்ற மனைவி! - சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம், அவுரையா என்ற இடத்தை சேர்ந்த திலிப் என்பவர் பிரகதி (22) என்ற பெண்ணை கடந்த 5ம் தேதிதான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு மாதத்திற்குள் அதாவது கடந்த 19ம் தேதி திலிப் அங்குள்ள ஒர... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்டதற்கு என்ன காரணம்? - சிபிசிஐடி-க்கு வழக்கு மாறிய பின்னணி

சென்னை கீழ்ப்பாக்கம் தாமோதர மூர்த்தி சாலையில் உள்ள வீட்டில் குடியிருக்கிறார் யூடியூபர் சவுக்கு சங்கர். இவரின் அம்மா கமலா. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவ... மேலும் பார்க்க

வாணியம்பாடி: நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து - பொதுத்தேர்வுக்கு சென்ற +2 மாணவி ஓடிசென்று ஏறிய கொடுமை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள கொத்தக்கோட்டை கிராமத்தில் இன்று காலை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவி ஒருவர் தனது கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில... மேலும் பார்க்க