திருமணமாகாத நக்ஸல்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி! சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல்
ராய்பூர்: சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நக்ஸல்களைக் கைது செய்ய உதவுவோர் மற்றும் அவர்களைப் பற்றிய துப்பு கொடுப்போர் எவரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு தரப்பில் நிலம் வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணத் தொகையும் அதிகரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நக்ஸல் நக்ஸல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரணடைந்தால் அவர்களுக்கு நிதியுதவியாக அரசு தரப்பிலிருந்து ரூ. 50,000 வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சரணடையும் நக்ஸல்கள் தங்களிடமுள்ள ஆயுதங்களை காவல் துறையிடம் ஒப்படைக்கும்போது, அதற்கான நிதியுதவியாக ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நக்ஸல் அமைப்பைச் சேர்ந்த திருமணமாகாதவர்கள் சரணடைந்தால், அவர்கள் திருமணம் செய்துகொள்ள நிதியுதவியாக சரணடைந்த 3 ஆண்டுகளுக்குள் ரூ. 1 லட்சம் வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.