கரூரில் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் -வருவாய் ரூ. 927.01 கோடி , செ...
இபிஎஸ் திடீர் தில்லி பயணம்!
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக தில்லி புறப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் பயணமாக தில்லிக்கு இபிஎஸ் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதையும் படிக்க : தெலங்கானா சுரங்கத்தில் மற்றொரு உடல் கண்டுபிடிப்பு! ஒரு மாதத்தைக் கடந்த மீட்புப் பணி!
அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அமைக்கும் கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் தற்போதைய கூட்டணி நீடிக்குமா?, அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைக்குமா?, புதிதாக கட்சித் தொடங்கியுள்ள விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார்? போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கிறது.
இந்த நிலையில், தில்லிக்கு புறப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைத்து களம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இபிஎஸ் தில்லி பயணம் எதற்காக என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.