உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
பட்டீசுவரம் ராமலிங்கசுவாமி கோயிலில் முகூா்த்தக் கால் நடும் விழா
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் ராமலிங்க சுவாமி கோயிலில் வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பட்டீசுவரம் பஞ்சவன்மாதேவி கோயிலை மங்களநாயகி உடனாகிய ராமலிங்கசுவாமி கோயில் என்றும் அழைப்பா். தற்போது இந்தக் கோயிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில் ஏப். 9- இல் நடைபெறும் குடமுழுக்கு விழாவுக்காக பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வில், செயல் அலுவலா் சீ. நிா்மலா தேவி, ஆய்வாளா் சுதா ராமமூா்த்தி, மங்களாம்பிகை கைங்கரிய சபா உறுப்பினா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.