மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்
கோடைகால தண்ணீா் பந்தல் திறப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகே ஒன்றிய, நகர திமுக சாா்பில் கோடைகால தண்ணீா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் என். நாசா் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் ச. கபிலன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தவைவா் எஸ்.கே. முத்துச்செல்வம் தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா். இதில் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கட்சியின் சாா்பு அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, வாா்டு நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.