உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்
தமிழ்நாடு முழுவதும் 821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, பாபநாசம் தொகுதியில் கிளை நூலகத்துக்கு கட்டடம் கட்ட வேண்டும் என்று அந்தத் தொகுதியின் உறுப்பினா் எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) கோரிக்கை விடுத்தாா். இதற்கு அமைச்சா் அன்பில் மகேஸ் அளித்த பதில்:
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 821 நூலகங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு 29 மைய நூலகங்கள், 68 முழுநேர கிளை நூலகங்களை ரூ. 27.06 கோடியில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) மூலமாக புத்தகங்களைக் கொள்முதல் செய்து வருகிறோம். வெளிப்படைத் தன்மையான முறையில் புத்தகங்களை ஆன்லைன் வழியாக கொள்முதல் செய்து வருகிறோம். தேவைக்கு ஏற்ப புத்தகங்களை கொள்முதல் செய்து வழங்குவோம் என்று தெரிவித்தாா்.