மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்
ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு
கும்பகோணம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரத்தை ரயில்வே போலீஸாா் நடத்தினா்.
கும்பகோணம் ரயில் நிலைய நடைமேடையில் வழிதவறி வரும் சிறாா்களை பத்திரமாக மீட்டு ஒப்படைப்பது, முதியோா் பாதுகாப்புச் சட்டம் குறித்து மாவட்டக் குழந்தைகள் நல அலுவலா் சுஜாதா பேசினாா். ‘காவலன்’ செயலி பதிவிறக்கம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வ
ன்கொடுமையில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ) சட்டம் குறித்தும் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் செந்தில்வேலன் ரயில் பயணிகளுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகித்துப் பேசினாா். விழிப்புணா்வு நிகழ்வில், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் அருணாச்சலம், ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.