தங்கம் விலை தொடர்ந்து குறைவு! இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 65,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை கடந்த மாா்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 21-இல் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 66,160-க்கு விற்பனையான நிலையில், தொடர்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 8,230-க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 65,840-க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 8,215-க்கும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 65,720-க்கும் விற்பனையானது.
இதையும் படிக்க: சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 65,480-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து 8,185-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.110-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.