``RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர ம...
ரூல்ஸ் போட்டால் ரூ போட்டு அலறச் செய்வார் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின்
சென்னை: பாசிஸ்டுகள் பல ரூல்ஸ் போட்டு நம்மை அடக்க நினைத்தாலும், ஒரு ரூ போட்டு அவர்களை அலறச் செய்வார் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று பேரவையில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
பேரவையில் இன்று உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், சென்னை கார் பந்தயத்தை விமர்சித்தவர்களே பாராட்டும்படி நடத்திக் காட்டியிருக்கிறோம். எந்த சவாலான போட்டியையும் எளிதில் நடத்தும் ஆற்றல் நமக்கு உண்டு என்பதற்குச் சான்று இது. ராதாபுரத்தில் சர்வதேச மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அவைத் தலைவர் அப்பாவு கோரிக்கையை ஏற்று முதல்வர் ஏற்கனவே அறிவித்த திட்டம் இது என்றும் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு எனது காரில் ஏற முயன்றார் இபிஎஸ், அப்போது எனது பாதை மாறாது என்று கூறினார். ஆனால் தற்போது மூன்று கார்கள் மாறி தில்லிக்கு பயணப்பட்டுள்ளார். ஒரு முறை கூட பேரவையில் என் பதிலின்போது இபிஎஸ் இல்லை. அவசரமாக தில்லி சென்றுவிட்டார்.
பாசிஸ்டுகள் பல ரூல்ஸ் போட்டு நம்மை அடக்க நினைத்தாலும் ரூ போட்டு அலறச் செய்வார் நமது முதல்வர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருக்கும் முதல்வருக்கு நன்றி கூறினார் உதயநிதி ஸ்டாலின்.