கருப்பசாமி பாண்டியனின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு -எடப்பாடி கே.பழனிசாமி
ராஜபாளையம்: ஆசிரமத்திற்கு வைத்த சீல் உடைப்பு; தடையை மீறி உள்ளே சென்ற நித்தியானந்தா சீடர்கள் கைது!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார்புரம் மற்றும் சேத்தூரில் நித்தியானந்தா பரமஹம்சர் ஆசிரமம் செயல்பட்டு வந்தது.
நித்தியானந்தர் சர்ச்சையில் சிக்கி வெளிநாடு சென்றதும் இந்த நிலத்தை தானமாக வழங்கிய மருத்துவர் கணேசன், பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் நிலம் தொடர்பான விவகாரத்தில் சுமுக தீர்வு எட்டுவதற்காக சந்திரன் என்பவருக்கு உரிமை வழங்கினார்.

இவருக்கும் ஆசிரம நிர்வாகிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருதரப்பினரும் நிலத்தை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது.
இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி தங்கியிருந்த சீடர்களை வட்டாட்சியர் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வெளியேற்றினர்.
மேலும் ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்தநிலையில், நள்ளிரவில் சேத்தூர் ஆசிரமத்திற்கு சென்ற மா நித்யா சாரானந்த சாமி, மா நித்ய சுத்த ஆத்மானந்தா சாமி ஆகிய இரண்டு பெண் சீடர்கள், ஆசிரமத்திற்கு அரசு அதிகாரிகள் வைத்த 'சீல்'-ஐ உடைத்து அறைக்குள் புகுந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்ய முயன்றனர்.

அப்போது பெண் சீடர்கள் இருவரும் இந்த நிலம் தங்களுக்கு தான் சொந்தம் என கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.