`அதிமுக-வை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!' - ஆ.ரா...
ஊட்டி: காட்டுக்குள் கிடந்த மனித காது; பின் தொடர்ந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி - என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள கவர்னர் சோலை பகுதி தோடர் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், கேந்தர் குட்டன். 40 வயதான இவர் நேற்று மாலை முதல் திடீரென காணாமல் போன நிலையில், கிராம மக்கள் அவரை தேடி அலைந்துள்ளனர். இரவு நீண்ட நேரமாக தேடியும் கேந்தர் குட்டனை கண்டறிய முடியவில்லை என்பதால், அருகில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை மீண்டும் தேடச் சென்றுள்ளனர். காட்டுக்குள் மனித காது ஒன்று துண்டித்து கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் அருகிலியே உடலை இழுத்துச் சென்றதற்கான தடயம் தென்பட்டிருக்கிறது.

அந்த தடத்தைப் பின்தொடர்ந்து சென்ற நிலையில் சில மீட்டர்கள் தொலைவில் கேந்தர் குட்டனின் பாதி உடல் கிடப்பதைக் கண்டு அச்சத்தில் உறைந்துள்ளனர். காவல்துறை மற்றும் வனத்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பகுதிக்குச் சென்று கேந்தர் குட்டனின் உடலை மீட்ட அரசுத் துறையினர் , புலியால் தாக்கி கொல்லப்பட்டு பாதி உடல் உண்ணப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னணி குறித்து தெரிவித்த வனத்துறையினர், "விறகு சேகரிக்க காட்டுக்குள் வந்த நபரை புலி தாக்கியிருக்கக் கூடும். அவர் உடலின் கை, மார்பு உள்ளிட்ட சில பகுதிகளைத் தவிர மற்ற பாகங்களைத் தின்றிருக்கிறது. வயது முதிர்வு அல்லது வேட்டைத்திறன் இழப்பு காரணமாக மனித வேட்டையில் அந்த புலி ஈடுபட்டிருக்கலாம். குறிப்பிட்ட அந்த புலியின் நடமாட்டத்தைக் கண்டறிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

சில கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுப்பதாக கூறினர். அது குறித்தும் பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது . இழப்பீடு வழங்கவும் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்கொள்ளல் நடந்த சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம்" என்றனர்.