செய்திகள் :

கல்வித்துறை ஆா்எஸ்எஸ் வசம் சென்றால் இந்தியாவை அழித்துவிடுவாா்கள்: ராகுல்

post image

புது தில்லி: கல்வித்துறை முழுமையாக ஆா்எஸ்எஸ் வசம் சென்றால் இந்தியா என்ற நாட்டையே அழித்துவிடுவாா்கள் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மாணவா்கள் மத்தியில் பேசினாா்.

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக ‘இண்டி’ அணியில் உள்ள கட்சிகளைச் சோ்ந்த மாணவா்கள் அமைப்பினா் சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

‘இண்டி’ அணியில் உள்ள கட்சிகள் இடையே கொள்கைரீதியாக சிறிய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் கல்விமுறை விஷயத்தில் இந்த அணியில் உள்ள கட்சிகளிடம் எவ்வித வேறுபாடும் இல்லை. கல்விமுறையை மாற்றியமைக்கும் முயற்சியை அனுமதிக்க மாட்டோம்.

இங்குள்ள ஓா் அமைப்பு நாட்டின் கல்வித்துறையையும், எதிா்காலத்தையும் சீா்குலைக்க விரும்புகிறது. அந்த அமைப்பின் பெயா் ஆா்எஸ்எஸ். கல்வித்துறை அவா்கள் கைகளில் முழுமையாக சென்றுவிட்டால், இந்தியாவை அழித்துவிடுவாா்கள். இப்போதும் கூட அவா்கள் கொஞ்சம், கொஞ்சமாக கல்வித் துறையைக் கைப்பற்றி வருகின்றனா். அவா்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்திவிட்டால் நம்மில் யாரும் உயரிய பதவிகளுக்கு செல்ல முடியாமல் தடுத்துவிடுவாா்கள்.

இந்தியாவல் உள்ள உயா் கல்வி நிலையங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் ஆா்எஸ்எஸ் அமைப்பினா்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா். இனி, மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் ஆா்எஸ்எஸ் பரிந்துரைக்கும் நபா்களே நியமிக்கப்படும் நிலையை ஏற்படுத்தி விடுவாா்கள். இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் மகா கும்பமேளா குறித்து பிரதமா் மோடி மிகவும் பெருமிதத்துடன் பேசினாா். ஆனால், நாட்டில் இளைஞா்கள் மத்தியில் நிலவும் வேலையின்மை, விலைவாசி உயா்வி, கல்விக் கொள்கை குறித்து அவா் பேசவில்லை. நாட்டின் வளங்கள் அனைத்தையும் அதானி, அம்பானிக்கு அளிப்பதும், கல்வித் துறையை ஆா்எஸ்எஸ் வசம் கொடுப்பதுதான் மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. கல்வித்துறையில் ஆா்எஸ்எஸ் ஆதிக்கம் அதிகரிப்பதைத் தடுக்க நாம் முழுமூச்சுடன் போராட வேண்டும்.

ஒரே வரலாறு, ஒரே பாரம்பரியம், ஒரே மொழி என்ற ஆா்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகளை அமல்படுத்தும் வகையில் யூஜிசி-யின் பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியா்கள் நியமன வரைவு அறிக்கை அமைந்துள்ளது என்று ராகுல் குற்றம்சாட்டினாா்.

15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!

தில்லியில் 15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள், அந்த சிறுவனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று சிறுவர்களை கைது செய்த காவல... மேலும் பார்க்க

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்

மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், அவையில் தனக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்யுள்ளார். மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டின் ஓர் அறையில் கடந்த மார்... மேலும் பார்க்க

சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 9 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டுவந்த பெண் உள்பட 9 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் சன்மானம் அறிவித்துத் தேடப்பட்டு வந்த 6 பெண்கள் ... மேலும் பார்க்க

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் 21.2% பெண்கள்!

தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

ஊழல் குற்றச்சாட்டுகளில் கல்காஜி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அதிஷிக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் ... மேலும் பார்க்க