Vipraj Nigam: "விப்ராஜுக்கு எவ்வளவு திறமை இருக்கிறதென்று எங்களுக்குத் தெரியும்" - DC கேப்டன் அக்சர்
ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற டெல்லி vs லக்னோ ஆட்டத்தில் டெல்லி அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது. டெல்லி வீரர் அஷுதோஷ் சர்மா கடைசி ஓவரில் வின்னிங் ஷாட் உட்பட 31 பந்துகளில் 66 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்திருந்தாலும், இடையில் விப்ராஜ் நிகம் 15 பந்துகளில் அதிரடியாக 39 ரன்கள் அடித்ததே டெல்லியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றது.

தோல்விக்குப் பிறகு பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூட, விப்ராஜ்தான் தங்களிடமிருந்து வெற்றியைப் பறித்துவிட்டதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில், வெற்றிக்குப் பின்னர் பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல், ``இப்போதே பழகிக்கொள்ளுங்கள், என்னுடைய கேப்டன்சியில் இப்படித்தான் இருக்கும். நாங்கள் வெற்றிபெற்று விட்டோம். இப்போது, யாரும் ஏன் ஸ்டப்ஸுக்கு ஓவர் கொடுத்தேன் என்று கேட்க மாட்டார்கள்.

முதல் ஆறு ஓவர்களில் அவர்கள் ஆடிய வித்தைப் பார்த்து நிறைய ரன்களை நாங்கள் கொடுத்துவிட்டதாக உணர்ந்தோம். நிறைய கேட்ச்களை தவறவிட்டோம். அவர்கள் 240 ரன்கள் அடிப்பார்கள் போலிருந்தது. பின்னர் சில விஷயங்களிலிருந்து மீண்டு வந்தோம். விப்ராஜுக்கு எவ்வளவு திறமை இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும்" என்று கூறினார்.