செய்திகள் :

Tamim Iqbal: ஃபீல்டிங்கின்போது நெஞ்சு வலி; மருத்துவமனையில் சொல்வதென்ன?

post image

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத முன்னாள் வீரர் தமிம் இக்பாலுக்கு நேற்று மைதானத்தில் அவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக, தமிம் இக்பால் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான டாக்கா பிரீமியர் லீக் தொடரில் சவாரில் நடைபெற்ற ஷைனேபுகுர் கிரிக்கெட் கிளப் அணிக்கெதிரான ஆட்டத்தில் முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் அணியின் கேப்டனாக நேற்று களமிறங்கினார்.

அப்போது, களத்தில் ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்த தமிம் இக்பாலுக்கு மார்பில் அசௌகரியம் ஏற்படவே அங்கிருந்த மருத்துவக்குழு அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

தமிம் இக்பால்
தமிம் இக்பால்

பின்னர், மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த பிறகுதான், அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக, தமனியில் அடைப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து ஆஞ்சியோகிராம் (Angiogram), ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) செயல்முறை மேற்கொண்ட பிறகு அவர் சுயநினைவுக்குத் திரும்பினார்.

இது குறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ நிபுணர் தேபாஷிஷ் சவுத்ரி, ``தமிம் இக்பால் முதலில் நெஞ்சில் வலி இருப்பதாகத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டு ஈசிஜி (ECG) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், ரத்தப் பரிசோதனையில் அவருக்கு பிரச்னை இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, மீண்டும் தான் அசௌகரியமாக உணர்வதாகவும், தலைநகர் டாக்காவுக்கு செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை ஏற்றிச் சென்றபோது அவருக்கு மீண்டும் நெஞ்சில் வலி ஏற்பட்டது. இரண்டாவது முறையாக மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதுதான் அவருக்குப் பெரிய அளவில் மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. தற்போது அவர் ஃபாசிலதுன்னேசா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்" என்று தெரிவித்தார்.

தமிம் இக்பால்
தமிம் இக்பால்

அதைத்தொடர்ந்து, அறிக்கை வெளியிட்ட வங்கதேச கிரிக்கெட் வாரியம், ``அவரின் உடல்நிலையை கிரிக்கெட் வாரியம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மருத்துவக் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம். அவரின் உடல்நிலை பூரணமாகக் குணமடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உறுதியாக இருக்கிறோம்." தெரிவித்தது.

இந்த நிலையில் தனியார் ஊடகத்திடம் பேசிய வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஹபிபுல் பஷார், ``தமிம் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார். அவருக்கு மிகுந்த கவனத்துடன் சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.

வங்கதேச அணிக்காக 70 டெஸ்ட், 243 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் தமிம் இக்பால் மொத்தமாக 25 சதங்கள், 94 அரைசதங்கள் உட்பட 15,249 ரன்களைக் குவித்திருக்கிறார். இவர், இந்த ஆண்டு ஜனவரியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர... மேலும் பார்க்க

GT vs PBKS : தியாகம் செய்த ஸ்ரேயாஸ்; வைசாக்கின் வைட் யார்க்கர் மந்திரம் - பஞ்சாப் வென்றது எப்படி?

பீல்டிங்கைத் தேர்வு செய்த கில்!ஐ.பி.எல் 18வது சீசனின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் தங்கள் முதல் கணக்கைத் தொடங்க அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தின... மேலும் பார்க்க

Dhoni: "ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்..." - Impact Player விதி குறித்து தோனி

IPL தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி. அதிக ரன்கள் வரும் போட்டிகளுக்கு அணியின் மனநிலைதான் முக்கிய காரணம் என்றும் பேசியுள்ளார்.202... மேலும் பார்க்க

IPL: ஆர்ச்சரை இனரீதியாக விமர்சித்த ஹர்பஜன்; வெடித்த சர்ச்சை... சாடும் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஐபிஎல் 18 வது சீசனின் இரண்டாவது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே மார்ச் 23-ம் தேதி ஹைதராபாத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்... மேலும் பார்க்க

Dhoni: ``உன் ஓவரை தோனி நொறுக்க வேண்டும்'' - இளம் வீரரின் கையில் பந்தைக் கொடுத்த ரோஹித்

ஐபிஎல் திருவிழா நடப்பு சாம்பியன் கொல்கத்தா vs பெங்களூரு ஆட்டத்துடன் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் பெங்களூரு அணியும், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணியும் வெற்றி ப... மேலும் பார்க்க